Wednesday, December 16, 2009

மெய் மறந்து






சுருள் சுருளாய்
குப்பைச் சருகு கூட்டுக்குள்
மெத்தென மெத்தையாய்
பச்சை இலைதழை அடுக்குகள்

இறக்கை போர்வையை
சற்றே சுருட்டி
குஞ்சுகளுக்கு விடியலை
அறிவித்தது சிட்டுகுருவி

ஆதவன் விழிக்காத அதிகாலை
ஆந்தையும் உறங்காத அதிகாலை
பனியும் வில‌காத அதிகாலை
தன்பணி தொடங்க பறந்தது குருவி

அடர்ந்த காட்டின் மேல்
அழகான வான‌த்தில்
ஆர்வமாய் பறந்தது
அன்றைய உணவுக்காக‌

வழியில் தெளிந்த நீரோடை
சற்றே தலைநனைத்து நிமிர்ந்தால்
காக்கையின் காலை வணக்கம்

நாரையும் கொக்கும்
நாங்களும் உண்டெனச் சொல்ல‌
இடையிடையே வாத்துக்கள்
நீந்திச் செல்ல.....

அந்த அழகை ரசிக்க‌
ஆதவனும் வந்தான்
அவன் வந்த வேளை
அனைவரும் உணர்ந்தர் தம்வேலை

புறப்பட்டது குருவி
தானியமோ, புழுவோ
வேண்டும் ஏதெனும் கொஞ்ச‌ம்

நெடுந்தூர தேடல்
பசுமை நிறைந்த கானகத்தில்
இது பசிக்கான தேடல்

கண்டது திணையை
மகிழ்ந்தது மனது
வேகம் கொண்டது சிறகு
விரைந்துத் தொட்டது திணையை

சட்டென ஒர் சத்தம்
சடக் சடக் சடக் சடக்
கூஊஊஊஊ
திடுக்கிட்டு விழித்தது குருவி


ரயில் சிக்னல் கம்பத்தில்
காய்ந்த குப்பை கூட்டுக்குள்
தான்வேய்ந்த சருகு மெத்தையில்

சிறகொடிந்த கனவுகளோடு
வாழ்கிறது

"கான்கிரிட் காட்டுக்குள்"







(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) 

Saturday, December 12, 2009

நன்றி


ஏழு வருட காதல்
மூன்று வருட போராட்டம்
பின் பெற்றோர் சம்மதம்

சுற்றத்தார் முன்னிலையில் திருமண‌ம்

என்னை ரசிக்க வைத்த
காதல் திருமணம்
என் எதிர் வீட்டில்

அன்பான தம்பதி
அழகான குழந்தை
அளவான வாழ்க்கை

இன்று

காலை காப்பியில்
சக்கரை சர்ச்சை
குழந்தையின் அட்மிஷனுக்கு
பள்ளியெது சர்ச்சை

பாத்திரச் சீட்டு
போட்டாலும் சண்டை
பாத்திரத்துக்காக பழைய துணி
போட்டாலும் சண்டை

சண்டை சண்டை
சன்டேயிலும் சண்டை
காதல் திருமணத்தில்
காதல் காணாமல் போன‌து

நான் எதிர்பார்க்காத வீட்டில்

நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்
"நன்றி"

Thursday, December 10, 2009

அது போல‌ காதலும்



கலையான கனவோடு
கடற்கரை மணல் வீடு
கட்டியது குழந்தை...

அழியாத வேகத்தோடு
வந்தன அலைகள்
கரைந்தது வீடு
கண்ணீரோடு குழந்தை

கண்ணீர் கரைந்த பின்
மீண்டும் வீடு
மீண்டும் அலை

அலைகள் ஓய்வதில்லை
காதலும்
அது போல‌ !!

Thursday, November 19, 2009

அலையும், நானும்




உன்னை சந்தித்து
பின் 
காதலை சந்தித்து
பின்
நாமிருவரும் சந்தித்த‌

நெஸ் கஃபே, "மளிகை கடையாகவும்"

இ.சி.ஆர் உணவகம், "பாராகவும்"

அழுக்கான மெரினா, "அழகு கடற்கரையாகவும்"

மாறியது உன்னை போலவே....

கடற்கரை காற்றும், அலையும், நானும்

மாறாமல்

உன் நினைவுகளுடன்


Thursday, November 5, 2009

சந்திர சூரியன்






என் காதல் சூரியனல்ல...
இரவில் மறைவதற்க்கு


என் காதல் சந்திரனல்ல...
பகலில் மறைவதற்க்கு


என் காதல்
இரவும் பகலும்

Thursday, August 27, 2009

சமர்பணம்

உயிரின் உணர்வுகளால்
வெளிப்படும் ஒலி "மொழி"
அந்த சத்தத்தினால்
ஏற்படும் பித்தத்தினால்
நடக்கும் யுத்தத்தினால்
மாயும் மானிடற்க்கு
என் எழுத்துக்கள் "சமர்பணம்"