Wednesday, December 16, 2009

மெய் மறந்து






சுருள் சுருளாய்
குப்பைச் சருகு கூட்டுக்குள்
மெத்தென மெத்தையாய்
பச்சை இலைதழை அடுக்குகள்

இறக்கை போர்வையை
சற்றே சுருட்டி
குஞ்சுகளுக்கு விடியலை
அறிவித்தது சிட்டுகுருவி

ஆதவன் விழிக்காத அதிகாலை
ஆந்தையும் உறங்காத அதிகாலை
பனியும் வில‌காத அதிகாலை
தன்பணி தொடங்க பறந்தது குருவி

அடர்ந்த காட்டின் மேல்
அழகான வான‌த்தில்
ஆர்வமாய் பறந்தது
அன்றைய உணவுக்காக‌

வழியில் தெளிந்த நீரோடை
சற்றே தலைநனைத்து நிமிர்ந்தால்
காக்கையின் காலை வணக்கம்

நாரையும் கொக்கும்
நாங்களும் உண்டெனச் சொல்ல‌
இடையிடையே வாத்துக்கள்
நீந்திச் செல்ல.....

அந்த அழகை ரசிக்க‌
ஆதவனும் வந்தான்
அவன் வந்த வேளை
அனைவரும் உணர்ந்தர் தம்வேலை

புறப்பட்டது குருவி
தானியமோ, புழுவோ
வேண்டும் ஏதெனும் கொஞ்ச‌ம்

நெடுந்தூர தேடல்
பசுமை நிறைந்த கானகத்தில்
இது பசிக்கான தேடல்

கண்டது திணையை
மகிழ்ந்தது மனது
வேகம் கொண்டது சிறகு
விரைந்துத் தொட்டது திணையை

சட்டென ஒர் சத்தம்
சடக் சடக் சடக் சடக்
கூஊஊஊஊ
திடுக்கிட்டு விழித்தது குருவி


ரயில் சிக்னல் கம்பத்தில்
காய்ந்த குப்பை கூட்டுக்குள்
தான்வேய்ந்த சருகு மெத்தையில்

சிறகொடிந்த கனவுகளோடு
வாழ்கிறது

"கான்கிரிட் காட்டுக்குள்"







(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) 

18 comments:

தாரணி பிரியா said...

நல்லா இருக்கு அருள். ஒரு சிறுகதை எபெக்ட்ல கவிதை வித் ட்விஸ்ட்.

தாரணி பிரியா said...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

படிக்கும்போது நீ சொல்ற விஷயம் எல்லாம் கண்ணு முன்னாடி காட்சிகளாய் எல்லாம் வந்து போச்சு

அருள்மொழியன் said...

நன்றி அக்கா

தியா அவர்கள்க்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

குருவியோடு சேர்ந்து மனமும் பறப்பதுதான் கவிதையின் வெற்றி. அருமை அருள்மொழியன். போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அருள்மொழியன் said...

நவாஸ் அண்ணா, மிக்க நன்றி

jas said...

அருள்...பின்னிட்டீங்க போங்க....உங்க கிட்ட நான் இதை எதிர் பார்க்கவே இல்லை....

அருள்மொழியன் said...

Thanks for your comment Jas

maria said...

nalla iruku arul.
innum nalla solli irukalam.
all the best.

அருள்மொழியன் said...

Thank you Maria

SUFFIX said...

நண்பர் நவாஸ் கூறியது போல், காட்சிகளை கண்முன்னே நிறுத்தி எங்களை கூடவே அழைத்து சென்று விட்டீர்கள் அருள். கலக்குங்க.

அருள்மொழியன் said...

உங்கள் ஆதரவு தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக கலக்கலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது அண்ணா

முகமூடியணிந்த பேனா!! said...

அருமை .

வாழ்த்துக்கள்

அருள்மொழியன் said...

தாமோதரன் சேகர் அவர்களுக்கு நன்றி

maria said...

rembo nalla iruku arul
all the best

Thenammai Lakshmanan said...

//சிறகொடிந்த கனவுகளோடு

வாழ்கிறது


"கான்கிரிட் காட்டுக்குள்//

மிக அருமை அருள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

jas said...

arul...y are you stuck up???? expecting more from you......

Henry J said...

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here