Saturday, December 12, 2009

நன்றி


ஏழு வருட காதல்
மூன்று வருட போராட்டம்
பின் பெற்றோர் சம்மதம்

சுற்றத்தார் முன்னிலையில் திருமண‌ம்

என்னை ரசிக்க வைத்த
காதல் திருமணம்
என் எதிர் வீட்டில்

அன்பான தம்பதி
அழகான குழந்தை
அளவான வாழ்க்கை

இன்று

காலை காப்பியில்
சக்கரை சர்ச்சை
குழந்தையின் அட்மிஷனுக்கு
பள்ளியெது சர்ச்சை

பாத்திரச் சீட்டு
போட்டாலும் சண்டை
பாத்திரத்துக்காக பழைய துணி
போட்டாலும் சண்டை

சண்டை சண்டை
சன்டேயிலும் சண்டை
காதல் திருமணத்தில்
காதல் காணாமல் போன‌து

நான் எதிர்பார்க்காத வீட்டில்

நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்
"நன்றி"

15 comments:

எம்.எம்.அப்துல்லா said...

:)

sakthi said...

நகைச்சுவை.. ஆயினும் உண்மை நிலை..! மிக நன்று நண்பரே..!

அருள்மொழியன் said...

நன்றி

அப்துல்லா அண்ணா

சக்தி

gayathri said...

நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்

kadhal tholvium azaka solli iurkega

SUFFIX said...

அச‌த்திட்டிங்க அருள். காதலிக்கும்போது காதல் மட்டுமே, திருமணத்திற்குப் பின் அது பின் தள்ளப்பட்டு மற்ற விடயங்கள் முன்னாடி வந்து பூச்சான்டி காட்டுகிறது, உங்க பாலிசி தான் எப்பவுமே பசுமையானது. வாழ்த்துக்கள் நண்பா.

அருள்மொழியன் said...

நன்றி Ms Gayathri

நன்றி ஷாஃபி அண்ணா

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு பாஸ். கடைசி வரி “நச்”

தாரணி பிரியா said...

காணாம போன காதல் காக்கா தூக்கிட்டு போன காதல் எல்லாம் ஜூனுக்கு பின்னாடி திரும்ப வரும் பாரு :))))))))

அருள்மொழியன் said...

நவாஸுதீன் அவர்களுக்கு நன்றி

அருள்மொழியன் said...

யக்கோவ்

ஜூன் போணால்
ஜூலை காற்று கூட வரும்கா

jas said...

பிரியா... கரெக்ட் ஆ சொன்னீங்க....

அருள்....நகைச்சுவையான கவிதையில் ஒரு அழகான மெசேஜ்... சூப்ப்ப்பர்...

அருள்மொழியன் said...

Thanks for your comment Jas

பத்மா said...

சண்டை போட்டால் காதல் போய்விடுமா என்ன ..அதிலும் மறைந்து
வாழ்கிறது உண்மை காதல்
பத்மா

அருள்மொழியன் said...

காதல் திருமணத்தை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவனின் உணர்வுதான் அது

தங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி Ms. Padma

Anonymous said...

anubaviththu paarum...umakku puriyum. neerum ariveer kaadhalai. andai veettaraai paarththu pesa vendaam anbare. andha sandaiyilum kaadhal irukkum. andha sandai mudindha pinnarum kaadhal irukkum. yengu illai sandai? umakku thriyumaa, andha sandaikooda avarkalukku sugam yendru? petror paarthu muduththa thirumana vaazhkkaiyil illiyaa? angum undu sandai. ange sandai vandhaal idhuthaan vaazhkkai yendru pesaamal vaazhvaargaal. ingu suthanthiram undu, aanaal kaadhal ullathaal udane koodalum undu.:-)